புதிதாக பிசினஸ் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?இது உங்களுக்காக !இளைஞர்களில் புதிதாக பிசினஸ் தொடங்குபவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாக உள்ளது.ஆரம்பித்த சிலவருடங்களிலேயே பிசினஸ்ஐ இழுத்து மூடுபவர்களின் எண்ணிக்கை அதை விட அதிகமாக உள்ளது.தொழிலை தொடங்கும்போது இருந்த சாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறி, தோல்வி அடைந்து அதை தாக்குப்பிடிக்க முடியாமல் இழுத்து மூடும்போது மட்டும் அந்த வெறி எங்கு போனது?.பிசினஸ் தொடங்குவதற்கு முன் நீங்கள் சில அடிப்படை நுணுக்கங்களை தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு பிறகு பிசினஸ் தொடங்கலாமா? வேணாமா? உங்களுக்கு ஒத்துவருமா என்று முடிவு செய்யுங்கள்.பிசினஸ் என்றால் எளிதான ஒன்று என நினைத்துதான் நாங்களும் ஆரம்பித்தோம். ஆனால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், ஏகப்பட்ட ஏமாற்றங்கள், தோல்விகள், அவமானங்களை சந்தித்தோம். இதனால் சில மாதங்கள், சில லட்சங்கள் வீணானது. அதன்பிறகு அனுபவங்களை வைத்து பிசினசில் நிலைத்து நிற்கிறோம்.இனிமேல் யாரும் பிசினஸ் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் தொடங்கக்கூடாது என்பதற்காகதான் இந்த புத்தகம்.புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஆர்வக்கோளாறில் என்ன செய்யக்கூடாது என்பதை இதில் அறிந்துகொள்ளலாம். என்ன செய்யவேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பது மிக முக்கியம்.அப்போதுதானே தேவை இல்லாத நஷ்டத்தை தவிர்க்க முடியும்.ஒரு பிசினஸ் தொடங்குவதற்கு முன் முக்கியமான சில அடிப்படை விசயங்களை தெரிந்துகொள்ளவேண்டும்.1. உங்களுக்கு பிசினஸ் ஒத்துவருமா?2. எந்த மாதிரியான பிசினஸ் உங்களுக்கு ஒத்துவரும்?3. தொழில் தொடங்குவதற்கு முன் நீங்கள் செய்யவேண்டிய அடிப்படை செயல்முறைகள் என்ன?4. தொழில் அறிவு, தொழில் ரகசியங்களை எப்படி நுணுக்கமாக அறிவது?5. புதுமைகளை புகுத்தி எப்படி உங்கள் தொழிலில் நீடித்து நிலைப்பது? தொழில் அறிவு, தொழில் ரகசியம் என்றால் என்ன?எடுத்துக்காட்டாக, ஊரில் எத்தனையோ பிரியாணி கடை இருந்தாலும், அந்த பாய் கடை பிரியாணி இருக்கே, அடடா! இது போன்று தனித்துவமாக இருப்பதற்கான காரணங்கள் என்ன? அதுதான் தொழில் அறிவு, தொழில் ரகசியம். இது போல ஒவ்வொரு தொழிலுக்கும் சில நுணுக்கங்கள் உள்ளது. அதை எப்படி அறிந்துகொள்வது என்ற செயல்முறை விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.Climate Change என்றால் என்ன?பருவகால மாற்றங்கள். வேலைக்கு செல்லும் இடத்தில் ஒவ்வொரு மாதமும் சம்பளம் சரியாக வந்துவிடும். ஆனால் தொழிலில் அப்படி அல்ல. ஒவ்வொரு மாதமும் வரும் லாபம் மாறுபடும். சில மாதங்களில் லாபமே வராது. இந்த லாபங்கள் ஒவ்வொரு தொழில் துறைக்கும் சில காரணிகளை பொறுத்து மாறுபடும்.மழை காலங்களில் ஐஸ் க்ரீம் விற்பனை குறைவாக இருக்கும். ஆனால், மருந்து விற்பனை அதிகமாக இருக்கும்.கோடை காலங்களில் ஐஸ் க்ரீம் மற்றும் முக பூச்சுகள், Face Wash போன்ற அழகு சாதன பொருள்கள் அதிகமாக விற்பனை ஆகும். இந்தியாவின் தொழில் துறையை புரட்டி போடும் ஒரு மாதம் உள்ளது.அதுதான் ஆடி மாதம். பொதுவாக நல்ல காரியங்கள் எல்லாம் நல்ல நாட்களில் தான் தொடங்கப்படும். ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் நடைபெறுவதில்லை. எல்லா தொழிலும் காத்து வாங்கும். இந்த மாதத்தில் விற்பனையை அதிகரிக்க தான் "ஆடி தள்ளுபடி" என்ற முறை வந்தது. இது போல தொழில் துறைகளில் ஏற்படும் பல வித்தியாசமான பிரட்சனைகளை பற்றி இங்கு விரிவாக, வித்தியாசமான பார்வையில் விவரிக்கப்பட்டுள்ளது.ஒரு பிரச்சனை ஏற்படும்போது நீங்கள் சௌகரியமாக உணர்வீர்களா? ஏனென்றால் பிசினஸ் என்றாலே பிரச்சனைதான். தினம் தினம் ஒரு பிரச்சனை ஏற்படும். அதை தீர்வு செய்வதுதான் தொழில்முனைவோரின் வேலை. காலையில் அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் சமைத்து சாப்பிட முடியாத பிரச்சனையை தீர்க்க Zomato தொடங்கப்பட்டது. அது தொடங்கப்பட்டு வெற்றி அடைந்த உடன் அதை போலவே போட்டி நிறுவனங்கள் உருவாகி பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. உங்கள் கண்முன்னே வெற்றிகரமாக இயங்ககூடிய எல்லா தொழில்களுமே அடிக்கடி பல பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அது நமது கண்களுக்குத்தான் தெரிவதில்லை. ஏனென்றால் நாம் வாடிக்கையாளராக இருந்து அந்த தொழிலை கவனிக்கிறோம். ஒரு தொழில்முனைவோராக, பிசினஸ் மேன் ஆக இருந்து கவனித்து பாருங்கள். மறைந்துள்ள பல விஷயங்கள் உங்கள் கண்ணுக்கு புலப்படும். சாதாரண நிலையில் இருந்து தொழில் தொடங்கும் இளைஞர்கள், முழுவதுமாக ஒரு தொழில்முனைவோராக மாறுவதற்கு இந்த புத்தகம் நிச்சயமாக உதவிகரமாக இருக்கும்.தொழில் தொடங்குவது நல்ல முடிவுதான். சில நஷ்டங்களை, தோல்விகளை தாக்குபிடித்து நீடித்து நிலைத்து நிற்கும் தன்னம்பிக்கை வேண்டும்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.தொடர்ந்து பயணிப்போம்.இப்படிக்கு Mr. KK